ஸ்ரீ தர்மசாஸ்தா துணை |
|||||||||||||||||||||||||||||||||||||
About Ayyappan Website : |
|||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||
SRI AYYAPPAN VILAKKUPOOJAI 2017 INVITATION |
|||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஐயப்பனின் மூன்று பணிகள் (அவதரித்த காரணம்) | |||||||||||||||||||||||||||||||||||||
சபரிமலையின் ராஜாவான ஐயப்பன் மூன்று செயல்களை செவ்வனே முடிப்பதற்காக அவதாரம் எடுத்தார். அசுரகுல அரசன் பிரம்மாசுரனை அழித்திட, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் தவமிருக்கும் ஐயப்பன்:தான் அவதாரம் எடுத்து வந்ததன் நோக்கத்தை முடித்த ஐயப்பன், பம்பை நதிக்கரையில் தவம் இருக்கப்போவதாக தனது வளர்ப்புத் தந்தை பந்தள மகாராஜாவிடம் சொல்லிவிட்டு சபரிமலைக்கு வந்துவிட்டார். இவர், கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11 வரையிலும், மகரசங்கராந்தி தினத் தன்றும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக தவநிலையில் இருந்து அருள்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொல்வதுண்டு.
|
|||||||||||||||||||||||||||||||||||||
சபரிமலை கோவில்: சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம். ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும்,
அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.
இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி'') மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. மகத்துவம் மிக்க மகரஜோதி: சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதாம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும். மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப்பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படும். குற்றங்களை பொறுத்தருள வேண்டும்: அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா! காசி, ராமேசுவரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
|
|||||||||||||||||||||||||||||||||||||
SABARIMALAI NEWS - LINKS |
|||||||||||||||||||||||||||||||||||||
போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள் அவசர உதவி் - முக்கிய டெலிபோன் எண்கள் - சபரிமலை சன்னிதானம் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள் ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும் சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை |
|||||||||||||||||||||||||||||||||||||
Copyright @ 2011 - 2018 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com |
|||||||||||||||||||||||||||||||||||||
HIT COUNTER | |||||||||||||||||||||||||||||||||||||