ஸ்ரீ தர்மசாஸ்தா துணை

Copyright @ 2011,2012 www.swamysaranam.co.in & powered by www.clientswebhosting.com

Supported by www.myayyappan.com , www.bakthimalai.com

HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

தர்மசாஸ்தாவைப் பற்றிய தகவல்கள்

குருசாமிகளின் கடமைகள்:

சபரிமலைக்கு 18 வருடங்களாக செல்லும் பக்தர்கள் குருசாமியாக இருப்பார்கள். அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இதோ:-

* குருசாமிகள் ஆண்டுதோறும் குறைந்தது 10 கன்னி சாமிகளை முறையாக 41 நாட்கள் விரதம் கடைபிடிக்க வைத்து சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

* குருசாமிகள் கன்னிசாமியிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்க கூடாது.

* குருசாமிகள் மிக சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து மற்ற அய்யப்ப பக்தர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.

* சுயநலங்களுக்கு உட்படாமல் அய்யப்பனுக்கும், அய்யப்பக்தர்களுக்கும் குருசாமிகள் சேவை செய்ய வேண்டும்.

கன்னிசாமிகளுக்கும், மற்ற சீடர்களுக்கும் அய்யப்பனின் பெருமை, சபரிமலை யாத்திரையின் உயர்விரத நெறிமுறைகள் பற்றி குருசாமிகள் எடுத்துக்கூறி அவர்களை நல்லவழியில் நடத்தி செல்வது அவசியமாகும்.

மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். கோயிலுக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட, மகரவிளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக்குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும். இதன்மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை:

அய்யப்பனை அன்னதான பிரபு என்பார்கள். அய்யப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி படைத்தவர்கள் நிச்சயமாக அன்னதானம் செய்ய வேண்டும். தானம் செய்வதற்கு முன் படுக்கை பூஜை அல்லது வெள்ளம்குடி பூஜை நடத்த வேண்டும்.

கன்னி அய்யப்பன்மார்கள் இந்த பூஜையை கட்டாயம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு இருமுடி கட்டு ஏந்தி புறப்படுவதற்கு முன் கார்த்திகை முதல் நாளிலிருந்து மார்கழி 11-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் இந்த பூஜையை நடத்த வேண்டும். வீட்டின் கிழக்குப்பாகத்தில் ஏழு கோல் சதுரத்தில் பந்தல் அமைக்க வேண்டும்.

பந்தலை அலங்கரித்து நடுவில் அலங்கார மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தில், அய்யப்பன் படம் அல்லது சிலையை அமைக்க வேண்டும். மேலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசாமி, கடுத்தசுவாமி, வாபர்சுவாமி, ஆழி ஆகியவற்றை அமைக்க உரிய இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த இடங்களில் சுவாமிகளுக்கு பதிலாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதன் முன்னர் அவல், பொரி, பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும். நடுப்பாகத்தில் அய்யப்பனை ஒரு பீடத்தின் மீது வைத்து பட்டு விரித்து அதன் முன்னால் இலை போட்டு, நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும்.

கிழக்கு திசையை நோக்கி சுத்தம் செய்யப்பட்ட தேங்காயை வைக்க வேண்டும். அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் ஆழி அமைப்பதற்கு இடம் ஒதுக்க வேண்டும். அதில் விறகுகளை அடுக்கி ஆழி வளர்க்க வேண்டும். பூவரசு அல்லது பலர் விறகுகளை ஆழியில் போட வேண்டும். அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்திய பிறகு ஆழியை ஏற்ற வேண்டும்.

அனைத்து அய்யப்பன் மார்களும் ஆழியை வலம் வர வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இதுதான் முறையான அய்யப்ப பூஜை ஆகும். கூட்டாகவும் இந்த பூஜை நடத்தலாம்.

விரத காலத்தில்... எளிமை, சுகாதாரம், புனித எண்ணங்கள் ஏற்படுதல் ஆகியவையே அய்யப்ப விரதத்தின் தத்துவம், உடலும், மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கற்பூர தீபம் அய்யப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர்.

சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து அய்யப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.


 

குருசாமிகளின் கடமைகள்,மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம்,சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை:

போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்

அவசர உதவி் - முக்கிய டெலிபோன் எண்கள் - சபரிமலை சன்னிதானம்

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்

தங்கும் விடுதிகள் - சபரிமலை

சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்

ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும்

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

ஐயப்பனின் வேறு பெயர்கள்

சாஸ்தாவின் ஏழுகோயில்கள்

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை விவரங்கள்

குருசாமிகளின் கடமைகள்,மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம்,சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

SOME OTHER NEWS - LINKS