home
தர்மசாஸ்தாவைப் பற்றிய தகவல்கள்
சபரிமலை சென்று திரும்பும் போது என்ன யாத்திரை?
கடுமையான விரதம் இருப்பது ஏன்?
ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று விட்டு, திரும்பும் யாத்திரையை மடக்கு யாத்திரை என்பர். மடக்கு என்றால் ஒடுக்குதல் என்று பொருள். நம் அகங்காரத்தை ஒடுக்கிக் கொண்டு திரும்பவேண்டும். மீண்டும் ஆணவ எண்ணம் தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தான் இதை மடக்கு யாத்திரை என்றார்கள். ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இதனை திரிகரணசுத்தி என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில், பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது. பிரம்மச்சர்யம் கடை பிடிக்க வேண்டும். கரடுமுரடான மலைப் பாதையில் குளிர்ச்சி மிக்க பனிக்காலத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சி முறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.
ஐயப்பன் வரலாறு
பெண் பக்தர்களுக்கு அம்மனின் பெயர்
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்த பின், அன்றிரவில் ஐயப்பனுக்கு மகரவிளக்கு வழிபாடு நடத்தப்படும். மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க, யானைமீது குடை, சாமரம் ஆகியவற்றுடன் வருவதே மகரவிளக்காகும். இந்த ஊர்வலம் பதினெட்டாம் படியேறும்போது பள்ளிவேட்டைவிளி நடத்தப்படும். அப்போது ஐயப்பனின் வரலாற்றை எடுத்துரைப்பர். இரண்டு நாட்கள் மகரவிளக்கு வழிபாடு நடத்தப்படும். விரதமிருக்கும் ஆண் பக்தர்களை ஐயப்பா சுவாமி என்று அழைப்பது வழக்கம். கண்ணில் காணும் அனைத்தையும் ஐயப்பனாகவே கருதுவதால் ஐயப்பன் என்று குறிப்பிடுகிறோம். எப்போதும் இவர்கள் ஜெபிப்பதும், காதில் கேட்பதும் சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் மந்திரம் தான். ஆண்களைப் போலவே பெண்களும் விரதம் மேற்கொள்வர். ஆனால், இவர்கள் பத்து வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது. பெண் பக்தர்களை மாளிகைப்புறம் என்று அழைப்பர். ஐயப்பன் கோயில் அருகிலுள்ள மாளிகைப்புறத்தம்மனின் பெயரால், அவர்களை இவ்வாறு அழைக்கின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?
சபரிமலையில் பூஜை செய்யும் முறை

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன்.  இதில்  ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது.  இது  தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள்.  ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

சபரிமலைக்கு சென்றதும் பக்தர்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்ற விபரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலை கோயிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்ளுருண்டை, பழம், பானகம், இளநீர் வழங்குதல், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சாத்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகள்.

நெய் அபிஷேகம்: சபரிமலை சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்மகுளத்திற்கு சென்று, தலையில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, அதிலிருக்கும் நெய்த்தேங்காயை உடைத்து, நெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். மேல்சாந்தி நெய்யை பகவானுக்கு அபிஷேகம் செய்து, சிறிதளவு நெய்யை பக்தருக்கு கொடுப்பார். அதை பிரசாதமாக எடுத்து வரலாம். மகரபூஜைஅன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து நெய் அபிஷேகம் நடக்கும். இந்த நாளில் ஏராளமானோர் அபிஷேகம் செய்ய முடியாமலே திரும்பிவிடுவர். இவர்கள் கொண்டு செல்லும் நெய்யை தீவட்டி, விளக்கு எரிக்க கொடுத்து விடுகிறார்கள். ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். இந்த நெய் அப்பம், அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நெய் அபிஷேகம் நடத்தியபிறகு ஐயப்ப சுவாமிக்கும், நெய்த்தேங்காயின் ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் இடுவார்கள்.

ஸ்ரீ தர்மசாஸ்தா துணை