ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
சபரிமலையில் தரிசனத்திற்கு இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், இலவசமாக, ஆன்-லைனில் முன் பதிவு செய்யும் முறையை, புதுவையில் உள்ள அய்யப்பா சேவா சங்கத்தின், செயலராக உள்ள நாகராஜன் கூறும் போது, கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோயிலில், கார்த்திகை மாதம், 1ம் தேதி முதல், மார்கழி மாதம், 15ம் தேதி வரை, 60 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.
அச்சமயத்தில் அய்யப்ப சாமியை தரிசனம் செய்ய, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால், 7.00 முதல், 12.00 மணி நேரம் வரை, நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டும். இதைத் தவிர்க்க, கேரள மாநில போலீசார், வர்சுவல் கியூ என்ற இலவச, ஆன்-லைன் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

இதற்கு, http://www.sabarimalaq.com என்ற இணையதளத்தில், பக்தர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின், அய்யப்பசாமியை தரிசிக்க விரும்பும் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யலாம்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பக்தர்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில், வர்சுவல் கியூ முன்பதிவிற்கு இடமிருந்தால், பக்தர்கள் தேர்வு செய்த நேரத்திலேயே சுவாமியை தரிசிக்கலாம்.

அப்படி அமையாத பட்சத்தில், ஆன்-லைன் முன்பதிவில் உள்ள காலண்டரில், யாரும் முன்பதிவு செய்யாத பச்சை நிறத்தில் உள்ள தேதியில், முன்பதிவு செய்யலாம். தேதியை தேர்வு செய்த பின், எந்த நேரத்தில் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பதை, டைம் ஸ்லாட் மூலம் உறுதிபடுத்தி முன்பதிவு செய்யலாம். 

வர்சுவல் கியூ திட்டம் மூலம், அதிகாலை, 4.00 மணி முதல், இரவு, 11.45 மணி வரை, அய்யப்பசாமியை தரிசிக்கலாம். முன்பதிவு செய்தபின், அதற்கான கூப்பனை, பிரின்ட் அவுட் எடுக்க வேண்டும். மேலும், முன்பதிவு செய்த பக்தர்களின், இ-மெயில் மற்றும் மொபைலுக்கு, முன்பதிவு செய்யப்பட்ட கூப்பன் எண் அனுப்பப்படும். 


சபரிமலையில் மண்டலகாலம் தொடக்கம்!
சபரிமலை: சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு மண்டலகாலம் தொடங்குகிறது. சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டலகாலம் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் இந்த ஆண்டு கார்த்திகை ஒன்றாம் தேதி ஒரு நாள் முன்னதாக இன்று பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்தது. மேல்சாந்தி தாமோதரன்போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து புதிய சபரிமலை மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி, அவரது தாயார் சாவித்ரி அந்தர்ஜனம், மாளிகைப்புறம் மேல்சாந்தி மனோஜ் ஆகியோர் 18-ம் படியேறி சன்னிதானம் வந்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்திகள் நாராயணன்நம்பூதிரி மற்றும் மனோஜ் ஆகியோருக்கு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை நான்கு மணிக்கு புதிய மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து 4.15-க்கு மண்டலகால நெய்யபிஷேகம் நடைபெறும். பின்னர் உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை ஆகிய வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பம்பை ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, மரக்கூட்டம் சுரங்கபாதை, மாளிகைப்புறம் கோயிலில் புதியபாதை ஆகிய திட்டங்களை தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தொடங்கி வைக்கிறார். இதுபோல சபரிமலையில் குவியும் குப்பைகளை பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தும் புண்ணியம் பூங்காவனம் திட்டமும் இன்று காலை தொடங்கப்படுகிறது.
அப்பம் விற்பனையில் தொடரும் கட்டுப்பாடு!
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு தொடர்கிறது. ஒருவருக்கு 10 பாக்கெட் அப்பம் வழங்கப்படுகிறது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம் மற்றும் அரவணை. அரவணை பக்தர்கள் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. அப்பமும் தொடக்கத்தில் அவ்வாறு வழங்கப்பட்டது. கூட்டம் அதிகரித்த போது தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. இதனால் ஒரு பக்தருக்கு அதிக பட்சமாக 30 பாக்கெட் அப்பம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கியதால் ஸ்டாக் பெருமளவு குறைந்தது. இதை தொடர்ந்து ஒரு பக்தருக்கு ஐந்து பாக்கெட் மட்டும் வழங்கப்பட்டது. இதனால் தேவையான அப்பங்கள் வாங்க பக்தர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. நேற்று ஒரு பக்தருக்கு 10 பாக்கெட்வீதம் வழங்கப்பட்டது. இதனால் மாளிகைப்புறம் அருகே உள்ள பிரசாத மண்டபத்தில் அப்பம் தயாரிக்க மேலும் பத்து அடுப்புகள் அமைக்கப்பட்டது. காஸ் மூலம் இதில் அப்பம் தயாரிக்கப்படும். தினசரி ஒரு லட்சம் பாக்கெட் என்பதற்கு பதிலாக, ஒரு லட்சத்து பத்தாயிரம் பாக்கெட் என உற்பத்தி அதிகரிக்கும். தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட்கள் தேவை என்ற நிலையில், 15 ஆயிரம் பாக்கெட்கள் பற்றாக்குறையாக உள்ளது. பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்தால் மட்டுமே, அப்பம் கட்டுப்பாட்டை நீக்க முடியும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER