சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை பூஜையின் போது, அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். அதாவது, விபூதி, பால்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் ஆகிய எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். திருமதுரம் என்னும் பிரசாதம் நைவேத்யம் செய்யப்படும். இதை பழம், தேன், சர்க்கரை சேர்த்து தயாரிப்பர். பின்னர் நெய்யபிஷேகம் நடக்கும். நண்பகலுக்கு முன்பு 15 தீபாராதனைகள் நடக்கும். அந்த தீபாராதனையின் போது பச்சரிசி சாதம் படைக்கப்படும். மதிய பூஜையின் போது, இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் ஆகியவை சேர்த்து பாயாசம் தயாரிக்கப்படும். இதை மதிய உணவாக ஏற்கிறார் ஐயப்பன். மகா நைவேத்யம் என்று இதற்குப் பெயர். இரவு பூஜையின் போது, அப்பம், பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. |
கட்டண விபரம்: சபரிமலையில் 40 வகையான பூஜைகள் நடைபெறுகிறது. 12 வகையான வழிபாட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலையில் மண்டல- மகரவிளக்கு காலத்திலும், இதர மாத பூஜை நாட்களிலும் 40 வகையான பூஜைகள் நடைபெறுகிறது. அதன் விபரம் வருமாறு. அடைப்புக்குறிக்குள் கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த கட்டணம் நெய்யபிஷேகத்துக்கும், அதிக பட்ச கட்டணம் படிபூஜைக்கும் வசூலிக்கப்படுகிறது.
உஷபூஜை(501), உச்சபூஜை(2001), நித்ய பூஜை(2501), கணபதிஹோமம் (200), பகவதிசேவை (1000), புஷ்பாபிஷேகம் (2000), களபாபிஷேகம் (3000), அஷ்டாபிஷேகம் (3500), லட்சார்ச்சனை (4000), சகஸ்ரகலசம் (25000), படிபூஜை (40000), உதயாஸ்தமனபூஜை (25000), உற்சவபலி (10000), முழுக்காப்பு (500), சகஸ்ரநாமஅர்ச்சனை (20), அஷ்ட்டேத்தர அர்ச்சனை (20), துலாபாரம் (100), நெய்யபிஷேகம் முத்திரை ஒன்றுக்கு (20), சுயம்வர அர்ச்சனை (25), நவக்கிரகபூஜை (100), ஒற்றைகிரகபூஜை (20), தங்கநகை பூஜை (25), மாலை, பிரம்பு பூஜை (15), கோயில் வளாகத்தில் பறயிடல்- தானிய காணிக்கை (100), கோயிலுக்கு வெளியில் பறயிடல் - தானிய காணிக்கை (120), நவக்கிரக நெய் விளக்கு (15), எழுத்து தொடங்கி வைத்தல் (101), அவல்பொரி நிவேத்யம் (15), அடிமை (100), தங்க அங்கி சார்த்துதல் (7500), வெள்ளி அங்கி சார்த்துதல் (4000), சோறு கொடுத்தல் (100), நாமகரணம் (75), நீராஞ்சனம் (75), உடையாடை சார்த்து (15), உடைஆடை நடைக்கு வைத்தல் (15), மஞ்சள் குங்கும அபிஷேகம் (25), நாகர்பூஜை (25), வரநிவேத்யம் (15) வல்ச நிவேத்யம் (25).
இவற்றில் களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், லட்சார்ச்சனை, சகஸ்ரகலசம், உற்சவபலி ஆகிய பூஜைகளுக்கு தேவையான பொருட்களை பக்தர்களே கொண்டு வரவேண்டும்.
வழிபாடு பிரசாதங்கள்: அப்பம் (25), அரவணை (60), விபூதி பிரசாதம் (15), வெள்ளை சோறு (10), சர்க்கரை பாயசம் (15), பஞ்சாமிர்தம் (50), பஞ்சாமிர்தம்-சிறிய டின் (20), பஞ்சாமிர்தம் - பெரிய டின் (50)அபிஷேக நெய் (50), ஐயப்ப சக்கரம் (120), பூஜிக்கப்பட்ட மணி- பெரியது (70), பூஜிக்கப்பட்ட மணி (40), |