ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
மகத்துவம் மிக்க மகரஜோதி

சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதாம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும். மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப்பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படும்.

இந்த ஜோதியை தரிசனம் செய்யும் லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் `சுவாமியே சரணம் அய்யப்பா' என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும். பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ அய்யப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.


HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER