ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
18 படிகளின் தத்துவம
சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர். தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன. முதல் 5 படிகள் இந்திரியங்கள் ஐந்தையும் குறிக்கும். அடுத்த 8 படிகள் அஷ்டமாசித்திகளை குறிக்கும், 14,15,16-வது படிகள் 3 குணங்களையும் குறிக்கும்.

17-வது படி ஞானத்தையும்,18-வது படி அஞ்ஞானத்தையும் குறிக்கிறது.புலன் ஐந்து,பொறி ஐந்து, பிராணன் ஐந்து,மனம் ஒன்று,புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று ஆக மொத்தம் பதினெட்டு. இவைகளை கடந்து கடவுளை காண வேண்டும் என்ற கருத்தின் படியே 18 படிகளும் அமைந்துள்ளது.
படி ஏற... படி ஏற... வாழ்வு உயருதய்யா!

அய்யப்பபக்தர்கள் மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும், முறையாகவும் கடைபிடித்து `தான்' என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருள் காடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.
HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER